Tuesday 6 November 2012

என்று தணியும்

படிப்பறிவு வந்ததும்
ரத்த காட்டெரியை உதறி தள்ளினோம்
இன்று Vampire பார்த்து பரவசம் அடைகிறோம்

ஹநுமரை பார்த்து இவன் மனிதனா இல்லை
விலங்கா என ஏளன படுத்தினோம்
இன்று Hulk-ஐ அப்படியே ஏற்றுக்கொண்டோம்

காத்தவாது கருப்பாவது என்று வினவினோம்
இன்று காற்றில் கருப்பே உருவமாய் பறக்கும்
Batman-ஐ பார்த்தால் புருவம் தூக்குகிறோம்

Pisa Tower-ஐ சாய்ந்து ரசிக்க தெரிந்த நமக்கு
சோழன் கொடுத்த நிலையில் பெருமிதம்
கொள்ள மறந்து போனது ஏனோ தெரியவில்லை

இன்றும் சொல்ல தோன்றுகிறது
என்று தணியும் இந்த
வெளிநாட்டவர் மீதுள்ள மோகம்..

Sunday 4 November 2012

காலம் எனும் தேனி

சொற்களின் துணையொடு
உள்ளிருந்து வெளிவரும்
தமிழ் என்பது கண்ணாடி பெட்டிக்குள்
அடைத்து விற்கப்படும் மது அல்ல
பூக்களின் உடலுக்குள் உயிராக
சுழன்று வரும் மது

தேனீக்களாள் உரியப்படும் மதுவோ
கூட்டை அடைந்து தேனாக மாறி
பிறரை இனிப்புக்கு உள்ளாக்குகிறது
தேனீக்கள் சந்திக்காத மதுவோ
மலருக்குலேயே தங்கி விடுகிறது

தேனியன் வருகையை ஒரு மலர்
எதிர்பார்ப்பதும் இல்லை வந்தால்
ஏனென்று கேட்பதுமில்லை
என் வகையிலும்
இது பொருந்தும்

காலம் என்னும் தேனி
இந்த மலருக்கு இன்று வருகை தரலாம்
நாளை வராமலும் போகலாம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்....

Thursday 1 November 2012

வாழ்வேன்

தெற்கு பார்த்த காற்றை
தடுக்க Compound Wall இல்லை
என்றதாலோ என் வாயிலுக்குள்
அதிரடியாய் நீ புகுந்தாய்

தட்டி கூப்பிட கதவு இல்லை
காலிங் பெல்லும் இல்லை
என்றதாலோ என் வீட்டிற்குள்
ஆவேசமாய் நீ பாதம் பதித்தாய்

INSAT  துணையின்றி வெள்ளை
நிலவையும் வால் நட்சத்திரங்களையும்
படுத்தபடியே நான் ரசித்திருந்ததாலோ
கோவமாய் கூரைகளை வீசி எறிந்தாய்

கஞ்சி கொதிக்க கடினப்பட்டு ஊதினோம்
என்று இரக்கப்பட்டா ஒரேதடியாய்
ஊதி அனைத்தாய்

நீளமாய் வந்த நிலமே உன்னால்
அடுப்பை மட்டுமே அணைக்க முடியும்
என் அடுத்த வேளை வாழ்வை அல்ல
கூரையை மட்டுமே வீச முடியும்
விடியல் வரும் என்றயென் எண்ணத்தை அல்ல
என் குடிசையை மட்டுமே பதம் பார்க்கமுடியும்
என் நம்பிக்கையை உட்வேகத்தை உழைப்பை அல்ல
வாழ்வேன்...