Sunday 4 November 2012

காலம் எனும் தேனி

சொற்களின் துணையொடு
உள்ளிருந்து வெளிவரும்
தமிழ் என்பது கண்ணாடி பெட்டிக்குள்
அடைத்து விற்கப்படும் மது அல்ல
பூக்களின் உடலுக்குள் உயிராக
சுழன்று வரும் மது

தேனீக்களாள் உரியப்படும் மதுவோ
கூட்டை அடைந்து தேனாக மாறி
பிறரை இனிப்புக்கு உள்ளாக்குகிறது
தேனீக்கள் சந்திக்காத மதுவோ
மலருக்குலேயே தங்கி விடுகிறது

தேனியன் வருகையை ஒரு மலர்
எதிர்பார்ப்பதும் இல்லை வந்தால்
ஏனென்று கேட்பதுமில்லை
என் வகையிலும்
இது பொருந்தும்

காலம் என்னும் தேனி
இந்த மலருக்கு இன்று வருகை தரலாம்
நாளை வராமலும் போகலாம்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்....

No comments:

Post a Comment